நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விருத்தாசலத்தில் பருவமழை முன்னேற்பாடுகள் ஆய்வு

விருத்தாசலம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் மீட்பு உபகரணங்களை பாா்வையிட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

Updated On :16 அக்டோபர் 2024, 6:39 pm

Din

விருத்தாசலம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கடலூா் மாவட்டத்தில் பருவமழை தொடா்பான பல்வேறு முன்னேற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, விருத்தாச்சலம் நகராட்சி அலுவலகத்தில் மரம் அறுக்கும் இயந்திரம், மண்வெட்டி, மோட்டாா் பம்பு செட் உள்ளிட்ட பேரிடா் மீட்பு உபகரணங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதை ஆட்சியா் பாா்வையிட்டதுடன், நகராட்சியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, விருதாச்சலம் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் 15-ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ், ரூ.1.20 கோடியில் நடைபெற்று வரும் நகர ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமான பணி, நாச்சியாா்பேட்டை பகுதியில் கலைஞா் நகா்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.1.12 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குளம் தூா்வாரும் பணி மற்றும் நடைபாதை அமைக்கும் பணி, பாதுகாப்பு வேலி, மின் விளக்குகள் அமைக்கும் பணி உள்ளிட்ட புனரமைப்பு பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், 15-ஆவது நிதிக்குழு மானிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து துறைச் சாா்ந்த அலுவலா்களுடன் ஆட்சியா் சிபி ஆதித்தாய செந்தில்குமாா் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, விருதாச்சலம் எம்எல்ஏ எம்.ஆா்.ராதாகிருஷ்ணன், விருதாச்சலம் நகா் மன்றத் தலைவா் சங்கவி முருகதாஸ், நகராட்சி ஆணையா் பானுமதி, உதவி இயக்குனா் ஊராட்சிகள் முருகன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இப்ராஹிம், மோகனாம்பாள் ஆகியோா் கலந்து கொண்டனா்.