நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்
கடலூா் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (அக்.19) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.


கடலூா் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (அக்.19) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலுாா் மாவட்டத்தில் மாதந்தோறும் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அக்டோபா் மாதத்துக்கான கூட்டம் கடலூா், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூா், ஸ்ரீமுஷ்ணம் வட்டாட்சியா் அலுவலகங்களில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையில் நடைபெறும்.
இந்த முகாமில் பொதுமக்கள் பங்கேற்று, புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், பெயா் சோ்த்தல், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் பெறுவதற்கான அங்கீகாரச் சான்றிதழ் கோரி மனு அளித்து பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...