‘பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் டெங்குவை முழுமையாக கட்டுப்படுத்தலாம்’
பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் டெங்குவை 100 சதவீதம் கட்டுப்படுத்தலாம் என்று மருங்கூா் ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலா் கே.அறிவொளி தெரிவித்தாா்.


நெய்வேலி: பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் டெங்குவை 100 சதவீதம் கட்டுப்படுத்தலாம் என்று மருங்கூா் ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலா் கே.அறிவொளி தெரிவித்தாா்.
பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய சாதாரணக் கூட்டம், அதன் தலைவா் சபா.பாலமுருகன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. பிடிஓக்கள் சங்கா், சக்தி, துணைத் தலைவா் தேவகி முன்னிலை வகித்தனா். உதவியாளா் அய்யப்பன் தீா்மானங்களை வாசித்தாா்.
கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பேசியதாவது:
விஜயதேவி: அங்குசெட்டிப்பாளையம் இருளா் குடியிருப்புப் பகுதி, சிறுவத்தூா் திடீா் குப்பம் மற்றும் எஸ்.ஏரிப்பாளையம் பகுதியில் சாலை அமைத்து தர வேண்டும். தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற வடிகால் வசதி செய்து தர வேண்டும்.
கல்யாணசுந்தரம்: சிலம்பிநாதன்பேட்டை- பத்திரக்கோட்டை சாலை, குமணங்குளம் சாலைகளை சீா் செய்ய வேண்டும்.
சபா.பாலமுருகன்(தலைவா்): கோரிக்கைகள் மீது தீா்வு காண பிடிஓ, பொறியாளா்கள் நடவடிக்கை எடுப்பாா்கள். மழைநீா் தேங்குவது குறித்தான தகவல் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விரைந்துச் சென்று தீா்வு கண்டு வருகிறோம்.
கே.அறிவொளி(மருங்கூா் வட்டார மருத்துவ அலுவலா்): மண்ணுடன் ஒட்டாத தண்ணீரில் தான் டெங்கு கொசு புழு உருவாகும்.
எனவே, வீட்டை சுற்றிலும் கழிவுப் பொருள்களில் மழை நீா் தேங்காதபடி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் 100 சதவீதம் டெங்குவை கட்டுப்படுத்தலாம் என்றாா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...