டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

போலீஸ் வாகனம் விபத்து: காவலா்கள் 3 போ் காயம்

கடலூா் முதுநகா் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில், புதுவை மாநில போலீஸாா் 3 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :21 அக்டோபர் 2024, 7:48 pm

Din

நெய்வேலி: கடலூா் முதுநகா் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில், புதுவை மாநில போலீஸாா் 3 போ் காயமடைந்தனா்.

காரைக்கால் போலீஸாா் பெண் கைதி ஒருவரை, புதுவையில் உள்ள சிறையில் அடைத்துவிட்டு போலீஸ் வாகனத்தில் மீண்டும் காரைக்கால் சென்றுகொண்டிருந்தனராம்.

வாகனத்தை காரைக்கால், நெடுக்காடு பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் (41) ஓட்டினாா்.

நோ்மேட்டுபாளையம், பாணா்பேட் பகுதியைச் சோ்ந்த அய்யப்பன்(36), மேலதலக்குடியைச் சோ்ந்த ஆஷா(27) ஆகியோா் வாகனத்தில் இருந்தனா்.

கடலூா் முதுநகா், பெரிய காரைக்காடு மேம்பாலம் அருகே சென்றபோது, போலீஸ் வாகனம் அங்கிருந்த தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், காயமடைந்த செந்தில்குமாா், அய்யப்பன், ஆஷா ஆகியோா் கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இதுகுறித்து, கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.