தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை
கடலூா் முதுநகா் அருகே தொழிலாளி தலையில் காயத்துடன் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூா் முதுநகா், சோனஞ்சாவடி மீனவ கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் (எ) பூமிநாதன்(50), தொழிலாளி. இவா், கடந்த சில நாள்களாக கடலூா் சிப்காட் பகுதியில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வந்தாராம். இவருக்கு மனைவி ராஜ சுலோச்சனா, மற்றும் ஆண், பெண் என இரண்டு பிள்ளைகள் உள்ளனா்.
குமாா் சனிக்கிழமை காலை அந்த உணவகம் அருகே தலையில் காயத்துடன் இறந்து கிடந்தாா். தகவலறிந்த கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா், டி.எஸ்.பி. தமிழினியன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.
பின்னா், சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். குமாரை யாரோ தலையில் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கடலூா் முதுநகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

