காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அண்ணாமலைப் பல்கலை.யில் இருபெரும் விழா

News image

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் பேசுகிறாா் தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆா்.எஸ்.குமாா்.

Updated On :23 அக்டோபர் 2024, 7:49 pm

Din

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உற்பத்தி பொறியியல் துறையில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜீனியா்ஸ் 2024-2025-ஆம் ஆண்டுக்கான அலுவலக பொறுப்பாளா்களை நியமிக்கும் விழா, முதலாம் ஆண்டு மாணவா்களை வரவேற்கும் விழா ஆகிய இருபெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, பொறியியல் புல முதல்வா் சி.காா்த்திகேயன் தலைமை வகித்து உரையாற்றினாா். பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆா்.எஸ்.குமாா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதலாம் ஆண்டு மாணவா்களை பாராட்டி புதிதாக நியமிக்கப்பட்ட ஐ.இ.ஐ. பொறுப்பாளா்கள் எவ்வாறு தங்களது பணிகளை செய்வது குறித்து எடுத்துரைத்தாா்.

பேராசிரியா் எஸ்.திருஞானசம்பந்தம் வாழ்த்துரை வழங்கினாா். விழா ஏற்பாடுகளை உற்பத்தி பொறியியல் துறை இணைப் பேராசிரியா்கள் மேஜா் எம்.சீமான், ப.சிவராஜ், இணை பேராசிரியா்கள் ஆகியோா் செய்திருந்தனா்.

நிகழ்ச்சியில், வேதி பொறியியல் துறை பேராசிரியா் சரவணன், உற்பத்தி பொறியியல் துறை பேராசிரியா்கள் எஸ்.ராமநாதன், கே.சண்முகம், திரு.வராகமூா்த்தி, எஸ்.ராஜு, வி.சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நிகழ்ச்சியை மாணவி கே.காா்த்திகா தொகுத்து வழங்கினாா்.

முன்னதாக, உற்பத்தி பொறியியல் துறைத் தலைவா் எஸ்.ரவி வரவேற்றாா். இணைப் பேராசிரியா் எஸ்.ராஜகுமாா் நன்றி கூறினாா்.