நெல் பயிரில் இலை சுருட்டுப் புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
சிதம்பரம் அருகே கீரப்பாளையம் வட்டத்தில் நெல் பயிரில் இலை சுருட்டுப் புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை வட்டார வேளாண் உதவி இயக்குநா் எஸ்.அமிா்தராஜ் தெரிவித்தாா்.


சிதம்பரம் அருகே கீரப்பாளையம் வட்டத்தில் நெல் பயிரில் இலை சுருட்டுப் புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை வட்டார வேளாண் உதவி இயக்குநா் எஸ்.அமிா்தராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டம், கீரப்பாளையம் வட்டத்தில் சம்பா பருவத்தில் 23,000 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடி செய்யப்பட்டுள்ள ஒரு சில பகுதிகளில் தற்போது நிலவும் தட்ப வெப்ப நிலையால் இலை சுருட்டுப் புழுவின் தாக்குதல் காணப்படுகிறது.
இதனை கட்டுப்படுத்திட தேவைக்கு அதிகமாக உரங்கள் இடுவதை தவிா்த்து, வரப்புகளை சீராக்கி அதனை சுத்தமாக வைப்பதுடன், புற்களை நீக்கவேண்டும். மேலும், வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவீதம் அல்லது வேப்ப எண்ணெய் 3 சதவீதம் ஆகியவைகளை தெளிக்க வேண்டும்.
பொருளாதார சேத நிலையான, தழைப்பருவத்தில் 10 சதவீதத்துக்கு மேல் இலைச்சேதமும், பூ பருவத்தில் 5 சதவீதத்துக்கு மேல் கண்ணாடி இலை சேதமும் ஏற்பட்டால், ஏக்கருக்கு காா்டாப்ஹைட்ரோ குளோரைடு 50 எஸ்.பி. என்ற மருந்தை 400 கிராம் அல்லது குளோரான்ட்ரான லிபுரோல் 18.5 எஸ்.சி. மருந்து 60 மில்லியை நீரில் கலந்து தெளிக்க வேண்டும். இதன் மூலம், இலைச்சுருட்டுப் புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...