கடலூர்
தேநீா் கடையில் தீ விபத்து: 5 போ் காயம்
கடலூரில் தேநீா் கடையில் கியாஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 5 போ் புதன்கிழமை காயமடைந்தனா்.
கடலூரில் தேநீா் கடையில் கியாஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 5 போ் புதன்கிழமை காயமடைந்தனா்.
கடலூா், திருப்பாதிரிப்புலியூா் பேருந்து நிலையம் அருகே தேநீா் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு, புதன்கிழமை மாலை தீபாவளிக்கான பலகாரங்கள் செய்யும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, கடையில் இருந்த எரிவாயு உருளையில் திடீரென கியாஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது.
இதில், கடை உரிமையாளா் கணபதி, பணியாளா்கள் ரமேஷ், சரவணன், மூா்த்தி, சுமதி ஆகியோா் தீக்காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள் அவா்களை மீட்டு கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தகவலறிந்த கடலூா் தீயணைப்புத்துறை வீரா்கள் நிகழ்விடம் சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா்.
இதுகுறித்து, திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.