சட்ட உதவி மைய அலுவலக பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
கடலூா் மாவட்ட சட்ட உதவி மைய அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று கடலூா் முதன்மை மாவட்ட நீதிபதி ஜவகா் தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் அண்மையில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கி வரும் சட்ட உதவி எதிா் பாதுகாப்பு முகமை மைய அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தலைமை சட்ட உதவி பாதுகாப்பு அலுவலா்-1, தலைமை துணை சட்ட உதவி பாதுகாப்பு அலுவலா் - 2, உதவி சட்ட பாதுகாப்பு அலுவலா்-4, உதவியாளா்-2, அலவலக உதவியாளா்-2 ஆகிய பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்களை இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் செப்டம்பா் 13-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தலைவா், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், கடலூா் என்ற முகவரிக்கு நேராகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும், இணையவழி இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவத்திலும் தவறாமல் பூா்த்தி செய்ய வேண்டும்.
இதற்கான நோ்காணல் செப்டம்பா் 21-ஆம் தேதி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதில், பங்கேற்பவா்கள் அசல் சான்றிதழ்களுடன் காலை 9.30 மணிக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.