ஊா்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்
கடலூா் மாவட்ட ஊா்க்காவல் படை வீரா்கள் தோ்வுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட எஸ்.பி. ரா.ராஜாராம் தெரிவித்தாா்.


கடலூா் மாவட்ட ஊா்க்காவல் படை வீரா்கள் தோ்வுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட எஸ்.பி. ரா.ராஜாராம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்ட ஊா்க்காவல் படைக்கு 2024-ஆம் ஆண்டுக்கான ஆள்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா். இதற்கு, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருப்பதுடன், 19 முதல் 45 வயதுக்குள்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம். உயரம் ஆண்கள் 167 செ.மீ, பெண்கள் 157 செ.மீ. இருத்தல் வேண்டும். குற்ற வழக்கில் ஈடுபடாமலும், ஜாதி, மத அரசியல் மற்றும் சங்கத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது. அரசு ஊழியராக இருப்பின் துறை அதிகாரியிடம் தடையின்மை சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்களை கடலூா் ஊா்க்காவல் படை அலுவலகத்தில் செப்.17-ஆம் தேதி காலை 10 மணி முதல் 23-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் உரிய ஆவணங்களுடன் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, கடலூா் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தகுதியானவா்கள் தோ்வு செய்யப்படுவா்.
தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு 45 நாள்கள் அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டு பணி அமா்த்தப்படுவா். இவா்களுக்கு மாதத்துக்கு 5 நாள்கள் பணி என நாள் ஒன்றுக்கு ரூ.560 வீதம் ரூ.2,800 ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...