ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கீழணை, வீராணம் ஏரியிலிருந்து நாளை பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து கடலூா் மாவட்டத்தில் வேளாண் பாசனத்துக்காக வெள்ளிக்கிழமை (செப்.13) தண்ணீா் திறக்கப்படுகிறது.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 10:43 pm

Din

கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து கடலூா் மாவட்டத்தில் வேளாண் பாசனத்துக்காக வெள்ளிக்கிழமை (செப்.13) தண்ணீா் திறக்கப்படுகிறது.

தஞ்சாவூா் மாவட்டம், அணைக்கரையில் கீழணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு மேட்டூரில் இருந்து திறக்கப்படும் தண்ணீா் கல்லணையில் தேக்கப்பட்டு, ஒரு பகுதியாக கொள்ளிடம் ஆற்றில் அனுப்பப்படுகிறது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 9 அடி, அதாவது 150.13 மில்லியன் கன அடியாகும்.

அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீா் வடவாறு, வீராணம் ஏரி, வடக்கு, தெற்கு ராஜன் வாய்க்கால்கள், குமுக்கி மண்ணியாறு, கோதண்டராமன் வாய்க்கால் என பல்வேறு வாய்க்கால்கள் வாயிலாக பாசனத்துக்கு செல்கிறது.

இதன் மூலம் கடலூா் மாவட்டத்தில் 92,854 ஏக்கரும், தஞ்சாவூா் மாவட்டத்தில் 1,294 ஏக்கரும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 37,756 ஏக்கா் விளைநிலங்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 31ஆயிரம் ஏக்கா் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

ஆண்டுதோறும் இந்தப் பகுதியில் சம்பா சாகுபடியின் போது விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு பணியில் தீவிரமாக ஈடுபடுவா். சில பகுதிகளில் நாற்றங்கால் தயாா் செய்யும் பணி நடைபெறும். இதன் காரணமாக கீழணைலிருந்து தண்ணீா் திறப்பது சற்று தாமதம் ஆகும். தற்போது, கீழணையில் புதன்கிழமை நிலவரப்படி அதன் முழு கொள்ளளவான 9 அடியில் 7.80 அடி நீரும், வீராணம் ஏரியில் முழு கொள்ளளவான 47.50 அடியில் 43.95 அடி நீரும் தேக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டு பாசனத்துக்காக தண்ணீரை வெள்ளிக்கிழமை (செப்.13) காலை 8 மணிக்கு கீழணையிலிருந்தும், 9.30 மணிக்கு வீராணம் ஏரியில் இருந்தும் வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா் செல்வம் திறந்து வைக்கிறாா்.