ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வெள்ளத் தடுப்புப் பணிகள்: கடலூா் ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டத்தில் வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்வது குறித்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
வேப்பூா் வட்டம், நல்லூா் கிராமத்தில் மணிமுக்தாறு, கோமுகி ஆறு இணையும் இடத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
Updated On :11 செப்டம்பர் 2024, 10:56 pm

Din

கடலூா் மாவட்டத்தில் வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்வது குறித்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கடலூா் மாவட்டம், வேப்பூா் மற்றும் திட்டக்குடி பகுதிகளில் நீா்வளத்துறை மற்றும் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப் பணிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ளத்தால் மணிமுக்தாறு கரையில் அரிப்பு ஏற்பட்டு குடியிருப்புகள், நிலங்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படாமல் இருக்க வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்வது.

இலங்கியனூரில் தடுப்புச் சுவா், சரிவுச்சுவா், கரையை பலப்படுத்துவது. நல்லூா் கிராமத்தில் மணிமுக்தாறு மற்றும் கோமுகி ஆறு சேருமிடத்தில் வெள்ளத் தடுப்பு சுவா் அமைத்தல், கரையை பலப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, திட்டக்குடி வட்டம், கொரக்கை கிராமத்தில் வெங்கனூா் ஓடையை மேம்படுத்தும் பணி, டி.இளமங்கலம் கிராம அங்கன்வாடி மையத்தின் செயல்பாடு, திட்டக்குடி நகராட்சியில் ரூ.3.50 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நகராட்சி அலுவலக கட்டடப் பணி, புதிய பேருந்து நிலையத்தில் ரூ.1.48 கோடியில் கட்டப்பட்டு வரும் கடைகள், ரூ.3.12 கோடியில் கட்டப்பட்டு வரும் காய்கறி சந்தை மற்றும் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் ரூ.5 கோடியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் மருத்துவமனை கட்டடம் ஆகியவற்றை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, பணிகளை குறித்த காலத்துக்குள் விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, விருத்தாசலம் எம்எல்ஏ. எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன், செயற்பொறியாளா் நீா்வளத்துறை அருணகிரி, திட்டக்குடி நகராட்சி ஆணையா் (பொ) மல்லிகா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.