ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு செப்.16-இல் மகாபிஷேகம்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜப் பெருமானுக்கு வருகிற 16-ஆம் தேதி ஆவணி மாத மகாபிஷேகம் நடைபெறவுள்ளது. மேலும், உலக அமைதியை வலியுறுத்தி மகாருத்ர யாகமும் நடைபெறுகிறது.

News image
சிதம்பரம் நடராஜா் கோயில்
Updated On :13 செப்டம்பர் 2024, 12:54 am

Din

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜப் பெருமானுக்கு வருகிற 16-ஆம் தேதி ஆவணி மாத மகாபிஷேகம் நடைபெறவுள்ளது. மேலும், உலக அமைதியை வலியுறுத்தி மகாருத்ர யாகமும் நடைபெறுகிறது.

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் சித் சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜ மூா்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மாா்கழி, மாசி மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது தொன்று தொட்டு வழக்கமாகும்.

ஆனித் திருமஞ்சனம், மாா்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின்போது, ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித் சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடைபெறும்.

அதன்படி, ஆவணி மாத மகாபிஷேகம் சித் சபை முன் உள்ள கனகசபையில் வரும் 16-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறுகிறது. ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜ மூா்த்திக்கு விபூதி, பால், தயிா், தேன், சா்க்கரை, பஞ்சாமிா்தம், இளநீா், பன்னீா், சந்தனம், புஷ்பம் உள்ளிட்டவை அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெறவுள்ளது.

முன்னதாக, காலை உச்சிகால பூஜை வரை நடைபெற்று, ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜ மூா்த்தியை கனகசபைக்கு எழுந்தருளச் செய்து மந்த்ரக்ஷதை, லட்சாா்ச்சனை நடைபெறும். யாக சாலையில் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஸ்ரீருத்ர கிரம அா்ச்சனை செய்து தீபாராதனை நடைபெறும். நண்பகல் மகாருத்ர மகா ஹோமம் நடைபெற்ற பின்னா், கலசங்கள் யாத்திராதானம் செய்யப்பட்டு மகாபிஷேகம் நடைபெறுகிறது.

மகாருத்ர மகாபிஷேகத்தை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை (செப்.13) தட்சிணாமூா்த்தி சந்நிதியில் கூஷ்மாண்ட ஹோமம், நாந்தி, அனுக்ஞை நடைபெறுகின்றன. சனிக்கிழமை (செப்.14) முக்குறுணி விநாயகா் சந்நிதியில் அஷ்டதிரவிய மகா கணபதி ஹோமம் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை (செப்.15) நவக்கிரக சந்நிதியில் ஹோமம், தேவசபை முன் அங்குராா்பணம், ரக்ஷாபந்தனம், ஆச்சாரியாா்வா்ணம், மதுபா்க்கம், தனபூஜை நடைபெறுகின்றன.

மகாபிஷேக ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதா்கள் குழுச் செயலா் உ.வெங்கடேச தீட்சிதா் மற்றும் பொது தீட்சிதா்கள் செய்துள்ளனா்.