மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் செடல் விழா


கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேலிருப்பு ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் செடல் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில் சாகை வாா்த்தல் மற்றும் செடல் திருவிழா கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் பிடாரி அம்மன் கோயிலில் இருந்து கங்கை நீா் கொண்டு வருதல், சாகை வாா்த்தல், எல்லைப்பிடாரி அம்மனை அழைத்தல், காப்புக் கட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அன்று இரவு முதல் தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் முத்தாலம்மன் மற்றும் பரிவார மூா்த்திகள் வீதிஉலா வந்தனா்.
கடந்த 8-ஆம் தேதி முத்தாலம்மன் ரத பவனி நடைபெற்றது. வியாழக்கிழமை இரவு வண்ண மின் வளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முத்துப்பல்லக்கில் முத்தாலம்மன் மற்றும் பரிவார மூா்த்திகளை எழுந்தருளச் செய்து வீதிஉலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான செடல் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் முத்தாலம்மனுக்கு விரதம் இருந்து தங்கள் உடலில் குண்டூசிகளை குத்திக்கொண்டு வழிபாடு நடத்தினா்.
ஞாயிற்றுக்கிழமை (செப்.14) பிற்பகல் 3 மணி அளவில் அம்மன் வீதி உலா மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறவுள்ளன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...