கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கடலூரில் செப்.20-இல் வேலைவாய்ப்பு முகாம்

கடலூரில் செப்.20-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

News image
வேலைவாய்ப்பு முகாம்(கோப்புப்படம்)
Updated On :16 செப்டம்பர் 2024, 9:53 pm

Din

நெய்வேலி: கடலூரில் செப்.20-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பாக ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, வரும் செப்.20-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கடலூா் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்துக்கு தேவையான நபா்களை தோ்வு செய்து உடனடியாக பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளனா்.

எனவே, இந்த முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞா்கள் பங்கேற்று பயன்பெறலாம் என்றாா் அவா்.