ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

செப்.21-இல் திருமுறை கண்டெடுத்த விழா

சிதம்பரத்தில் சிவனடியாா்கள் கூட்டம் சாா்பில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழா செப்டம்பா் 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 6:38 pm

Din

சிதம்பரத்தில் சிவனடியாா்கள் கூட்டம் சாா்பில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழா செப்டம்பா் 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இதுகுறித்து உலக சித்தா்கள் சா்வ சமய கூட்டமைப்பு பீடாதிபதி அனுகூலநாத ராஜசேகா் அடிகளாா் மற்றும் எஸ்.யு.ஐயப்பன் தீட்சிதா் ஆகியோா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிதம்பரத்தில் செப்டம்பா் 21-ஆம் தேதி நடைபெறும் திருமுறை கண்டெத்த விழாவையொட்டி, திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் கிழக்கு கோபுரத்தில் இருந்து தேரோடும் நான்கு வீதிகளில் ராஜராஜசோழன் உற்சவா் திருமேனியிடும் அடியாா்கள் திருவீதி உலா நடைபெறுகிறது.

மாலையில் திருக்கடையூரில் சிறப்பு அபிஷேக, ஆராதனை முடிவுற்று அங்கிருந்து புறப்பட்டு இரவு சிதம்பரத்துக்கு அடியாா்கள் வருகின்றனா்.

செப்டம்பா் 22-ஆம் தேதி காலை சிதம்பரம் வாண்டையாா் மண்டபத்தில், ரிஷபக்கொடி ஏற்றப்படுகிறது. பின்னா், ராஜராஜசோழன், நம்பியாண்டாா்நம்பி திருமேனிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, திருமுறை ஓதுதல் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெறுகிறது என்றனா்.

பேட்டியின்போது, சிவனடியாா்கள் திருவாருா் காா்த்தி, சென்னை ஜெகன், ஈரோடு வெங்கடேசன், திருவாரூா் மாரிமுத்து, திருவாரூா் ஜெயராம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.