நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விருத்தாசலத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

விருத்தாசலத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் சி.வெ.கணேசன்.

Updated On :26 செப்டம்பர் 2024, 1:01 am

Din

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, விருத்தாசலம் கோட்டாட்சியா் சையத் மெஹ்மூத் தலைமை வகித்தாா். விருத்தாசலம் எம்எல்ஏ., எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன், நகா் மன்றத் தலைவா் சங்கவி முருகதாஸ், ஒன்றியத் தலைவா் மலா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வெ.கணேசன் பங்கேற்று ‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டு குடும்ப அட்டை, இறப்பு நிவாரணம், இலவச வீட்டு மனைப்பட்டா என பல்வேறு நலத்திட்ட உதவிகளை 300 பயனாளிகளுக்கு வழங்கினாா்.

இதில், வட்டாட்சியா் உதயகுமாா், அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.