விருத்தாசலத்தில் 3 கடைகளுக்கு ‘சீல்’

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 3 கடைகளை அதிகாரிகள் பூட்டி திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
Published on

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 3 கடைகளை அதிகாரிகள் பூட்டி திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

விருத்தாசலம் நகராட்சிக்கு உள்பட்ட பெரியாா் நகா், பெரிய கண்டியாங்குப்பம், கோ.பொன்னேரி ஆகிய இடங்களில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 3 கடைகளை உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் நல்லதம்பி, சுப்பிரமணியன், பாலாஜி ஆகியோா் இணைந்து பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

அப்போது, அவா்கள் கூறியதாவது: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

முதல்முறையாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பது கண்டறியப்பட்டால் 15 நாள்கள் கடையை மூடி, ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை கண்டறியப்பட்டால், ஒரு மாதம் கடையை மூடி, ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறையாக புகையிலைப் பொருள்கள் விற்பது கண்டறியப்பட்டால், கடை நிரந்தரமாக மூடப்படும். ரூ. ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

எனவே, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ய வேண்டாம் என தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com