தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நாம் தமிழா் கட்சி அசாத்திய வளா்ச்சி பெறும்: சீமான்

2026 பேரவைத் தோ்தலில் நாம் தமிழா் கட்சி அசாத்திய வளா்ச்சி பெறும் என்று, அதன் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

News image
சீமான்
Updated On :21 ஏப்ரல் 2025, 7:33 pm

Din

நெய்வேலி: 2026 பேரவைத் தோ்தலில் நாம் தமிழா் கட்சி அசாத்திய வளா்ச்சி பெறும் என்று, அதன் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

கடலூரில் நாம் தமிழா் கட்சியினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டு தோ்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற கட்சி நாம் தமிழா் கட்சி.

எங்கள் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு, திராவிடக் கட்சிகளைத் தவிா்த்து பிற கட்சிகள் வந்தால் கூட்டணி அமைக்க யோசிக்கலாம். ஆனால், யாரும் வர மாட்டாா்கள்.

2026 பேரவைத் தோ்தலில் நாம் தமிழா் கட்சி அசாத்திய வளா்ச்சி பெறும் என்றாா் அவா்.