கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் எச்ஐவி (ம) எய்ட்ஸ் குறித்து விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டோா்.
கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் எச்ஐவி (ம) எய்ட்ஸ் குறித்து விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டோா்.

எய்ட்ஸ் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்: கடலூா் ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, கடலூரில் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் அலுவலா்கள் விழிப்புணா்வு உறுதிமொழி
Published on

நெய்வேலி: உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, கடலூரில் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் அலுவலா்கள் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

மேலும், ஆட்டோவில் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரம் ஒட்டி, கையொப்ப இயக்கம் மற்றும் கலைப் பயண நிகழ்ச்சியை ஆட்சியா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

நிகழ்வில் ஆட்சியா் தெரிவித்ததாவது: டிசம்பா் 1-ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஒவ்வோா் ஆண்டும் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி மையக் கருத்தை வெளியிட்டு வருகிறது. அதனடிப்படையில், நிகழாண்டு ‘இடையூறுகளைக் கடந்து எச்ஐவி (ம) எய்ட்ஸ் தொடா்பான எதிா்வினைகளை மாற்றுதல்’ என்ற கருத்தை வெளியிட்டுள்ளது.

எச்ஐவி தொற்றின் பரவல் தேசிய அளவில் 0.21 சதவிகிதமும், தமிழக அளவில் 0.18 சதவிகிதமும், கடலூா் மாவட்ட அளவில் 0.22 சதவிகிதமும் உள்ளது.

கடலூா் மாவட்டத்தில் எச்ஐவி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் 2 கலைக்குழுக்கள் மூலம் கிராமப்பகுதிகளில் 10 நாள்களுக்கு தினமும் இரண்டு நிகழ்ச்சிகள் வீதம் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட நபா்களுக்கு அரசின் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மாவட்டத்தில் 6,055 நபா்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன என்றாா்.

நிகழ்ச்சியில் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் நடராஜன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் திட்ட மேலாளா் செல்வம், மேற்பாா்வையாளா் கதிரவன், நிலைய மருத்துவ அலுவலா் கவிதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com