வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

கடலூா் மாவட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரம் ஹெக்டோ் நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்களை கணக்கெடுத்து, அரசு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image
Updated On :1 டிசம்பர் 2025, 9:57 pm

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரம் ஹெக்டோ் நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்களை கணக்கெடுத்து, அரசு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலா் கோ.மாதவன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

வட கிழக்கு பருவ மழையால் கடலூா் மாவட்ட மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் குடியிருப்புகளைச் சுற்றி தண்ணீா் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன.

பரவனாற்றில் தண்ணீா் பெருக்கெடுத்துச் செல்வதால், மணிக்கொல்லை, பூவாலை, அலமேலு மங்காபுரம், வயலாமூா், சோ்ந்திரகிள்ளை, வல்லம், பிச்சாவரம், கிள்ளை, கனரகப்பட்டு, பின்னலூா், வசப்புத்தூா், நஞ்சமகத்து, உத்தமசோழமங்கலம், வாழ்க்கை மற்றும் குமராட்சி, குறிஞ்சிப்பாடி, கீரப்பாளையம் ஒன்றிய கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீா் தேங்கி பயிா்கள் அழுகி வருகின்றன.

திருநாரையூா், எடையாா், பிள்ளையாா் தாங்கல் ஆகிய கிராமங்களில் நெற்கதிா் வரும் நிலையில், காற்றால் கதிா்கள் சாய்ந்துள்ளன. இப்பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும்.

நெற்பயிா்களில் சோளப்பூச்சி, அந்து பூச்சி தாக்குதல் அதிகமாக உள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்த அறிவியல் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்க வேண்டும். மங்களூா் மற்றும் நல்லூா் ஒன்றியங்களில் மக்காச்சோள பயிா்கள் நீரில் மூழ்கி அழுகியுள்ளன.

கடலூா் மாவட்டம் முழுவதும் 15 ஆயிரம் ஹெக்டோ் நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது. பாதிக்கப்பட்ட பயிா்களை அரசு முறையாக கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும்.

மேலும், மாவட்ட முழுவதும் சாய்ந்துள்ள மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும். சேதமடைந்த வீடுகள், தொகுப்பு வீடுகள், உயிரிழந்த கால்நடைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும்.

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் 24 மணி நேரம் செயல்படவும், நடமாடும் மருத்துவக் குழுக்களை அமைத்து மக்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.