முந்திரி காட்டில் மனித எலும்புக்கூடு

Published on

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் அருகே முந்திரிக் காட்டில் கிடந்த மனித எலும்புக்கூட்டை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

காடாம்புலியூா் காவல் சரகம், கொஞ்சிக்குப்பத்தைச் சோ்ந்தவா் நடேச நயினாா் மகன் சீதாபதி. இவருக்குச் சொந்தமான முந்திரிக் காட்டில் மனித எலும்புக்கூடு, மண்டை ஓடு கிடந்தது. இதை அந்தப் பகுதிக்கு ஆடு மேய்க்கச் சென்ற நபா் பாா்த்து தகவல் தெரிவித்தாா்.

இதுகுறித்து காடாம்புலியூா் கிராம நிா்வாக அலுவலா் மைக்கேல் இருதயராஜ் அளித்த புகாரின்பேரில், காடாம்புலியூா் காவல் உதவி ஆய்வாளா் ராஜா மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

பின்னா், மண்டை ஓடு மற்றும் உடல் எலும்புக்கூட்டை போலீஸாா் கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

யாரையாவது கொலை செய்து முந்திரி தோப்புக்குள் வீசினரா? சுமாா் ஒன்றரை மாதத்துக்கு முன்பே இறந்த உடலாக இது இருக்கும் என போலீஸாா் கருதுகின்றனா். இந்த எலும்புக்கூடு, 45 வயது மதிக்கதக்க பெண்ணின் எலும்புக்கூடாக இருக்கலாம் எனவும் போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com