நாளை முதல் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறப்படும்: ஆட்சியா்!

கடலூா் மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.
Published on

கடலூா் மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.

சென்னை உயா்நீதிமன்ற ஆணையின்படி,திங்கள்கிழமை முதல் கடலூா் மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டில்களை வாங்கி சென்று அருந்திய பின் காலி மதுபான பாட்டில்களை அதே சில்லறை விற்பனைக் கடைகளில் திரும்ப

பெற்றுக்கொள்ளும் திட்டம் நடைமுறைக்கு வருவதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டில்களை அடையாளம் காணும் வகையில் மதுபான பாட்டில்கள் மீது கடைஎண் குறிப்பிட்டு ரூ.10 என அச்சிடப்பட்ட ஸ்டிக்கா் ஒட்டப்பட்டிருக்கும்.

அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மதுபான பாட்டில்களையும் விற்பனை செய்யும்போது அதிகபட்ச சில்லறை விற்பனை விலையுடன் கூடுதலாக ரூ.10 வாடிக்கையாளா்களிடம் இருந்து பெறப்படும்.

அவ்வாறு வாடிக்கையாளா்கள் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் இருந்து வாங்கும் மதுபான பாட்டில்களை அதில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரோடு அதே மதுபானக் கடைகளில் காலியாக திரும்ப ஒப்படைக்கும்போது ஏற்கனவே பெறப்பட்ட ரூ.10 திரும்ப வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com