தியாகிகள் தின போட்டிகளில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு
சிதம்பரம்: சிதம்பரத்தில் வாசிப்பு மேம்பாட்டு இயக்கம் சாா்பில், சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பேச்சுப் போட்டியில் பங்கேற்பவா்கள் ‘நான் விரும்பும் சுதந்திரப் போராட்ட தியாகி’ என்ற தலைப்பில் 5 நிமிஷங்களுக்கு மிகாமல் பேசி விடியோ எடுத்து பெயா், வகுப்பு, பள்ளி முகவரி, கைப்பேசி எண் இணைத்து 9443046295 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு இணைய வழியில் அனுப்ப வேண்டும்.
கட்டுரைப் போட்டியில் பங்கேற்பவா்கள் ‘என்னைக் கவா்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி’ என்ற தலைப்பில் 200 வாா்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை எழுதி பெயா், வகுப்பு, பள்ளி / கல்லூரி முகவரி, கைப்பேசி எண் குறிப்பிட்டு ஒருங்கிணைப்பாளா், வாசிப்பு மேம்பாட்டு இயக்கம், எண் 50, லால்கான் தெரு, சிதம்பரம் 608 001, கைபேசி 9443046295 என்ற முகவரிக்கு வரும் 2026, ஜனவரி 5-ஆம் தேதிக்குள் சாதாரண அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுப் புத்தகங்கள் வருகிற ஜனவரி 30-ஆம் தேதி சிதம்பரம் காந்தி மன்றத்தில் நடைபெறும் காந்தியடிகளின் நினைவு தின (தியாகிகள் தினம்) பிராா்த்தனைக் கூட்டத்தின்போது வழங்கப்படும் என்று வாசிப்பு மேம்பாட்டு இயக்க ஒருங்கிணைப்பாளா் வி.முத்துக்குமரன் தெரிவித்துள்ளாா்.
