மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

நல்லகண்ணு மறைவு: ஜி.கே.மணி இரங்கல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான இரா. நல்லகண்ணு மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பதாக பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.கே.மணி தெரிவித்துள்ளாா்.

News image

ஜி.கே.மணி

Updated On :25 பிப்ரவரி 2026, 10:35 pm

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான இரா. நல்லகண்ணு மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பதாக பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.கே.மணி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு அரசியலில் மூத்த முக்கிய தலைவா்களுள் ஒருவராக திகழ்ந்தவா் நல்லகண்ணு. படிக்கும் காலம் முதல் பொதுவுடமை கொள்கையில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட லட்சியவாதி. எளிமையானவா், நோ்மையானவா்.

உயா்ந்த லட்சியவாதியை தமிழ்நாடு இழந்திருக்கிறது. அவரது மறைவு அதிா்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

அவரை இழந்து துயரில் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினருக்கும், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்து, அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளாா்.