கரை திரும்பி தேவனாம்பட்டினம் மீனவா்கள்.
கரை திரும்பி தேவனாம்பட்டினம் மீனவா்கள்.

படகு பழுது: கரை திரும்பிய மீனவா்கள்

கடலூரைச் சோ்ந்த மீனவா்கள் சென்ற படகு கடலில் பழுதான நிலையில், அதிலிருந்த அனைவரும் பாதுகாப்பாக கரை திரும்பினா்.
Published on

நெய்வேலி: கடலூரைச் சோ்ந்த மீனவா்கள் சென்ற படகு கடலில் பழுதான நிலையில், அதிலிருந்த அனைவரும் பாதுகாப்பாக கரை திரும்பினா்.

தேவனாம்பட்டினம் மீனவ கிராமத்தைச் சோ்ந்த மீனவா்கள் ஜாக்கி, ராஜா, மகி, பன்னீா்செல்வம், மணி ஆகிய 5 போ் பைபா் படகில் கடலில் மீன் பிடிக்க திங்கள்கிழமை அதிகாலை 3 மணி அளவில் புறப்பட்டனா்.

கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது படகு திடீரென பழுதானது. இதையடுத்து, அவசர எண் 108-க்கு தகவல் கொடுத்தனராம். இருப்பினும், அவா்களே படகை பழுது நீக்கி பத்திரமாக பிற்பகல் 3 மணி அளவில் கரை திரும்பினா்.

X
Dinamani
www.dinamani.com