

சிதம்பரம்: சித்தலாப்பாடியில் போலீசாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கொள்ளையன் மைக்கேல் மகன் ஸ்டீஃபன் ( வயது 38) போலீஸாரால் சுட்டுப் பிடிக்கப்பட்டார்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் காவல்துறை நடத்திய 3 துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 6 பேரை சுட்டுப் பிடித்துள்ளனர்.
அண்ணாமலை நகரில் நடந்த கொள்ளை சம்பவத்தில் பயன்படுத்திய ஆயுதங்களை மீட்க சென்றபோது போலீஸாரை தாக்கித் தப்பி ஓட முயன்றபோது காவல் ஆய்வாளர் கே.அம்பேத்கார் தலைமையிலான போலீசார் அவரைக் கால் முட்டியில் சுட்டுப் பிடித்தனர்.
பிடிபட்ட ஸ்டீஃபன் மீது தமிழகம் முழுவதும் 27 கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஆய்வாளர் அம்பேத்கார் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மூன்றாவது சம்பவம்..
திருநெல்வேலியில் நிலப் பிரச்னை காரணமாக ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் ஜாகீா் உசேன் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முகமது தெளஃபிக் என்பவரை நெல்லை போலீசார் நேற்று பிற்பகல் சுட்டுப் பிடித்தனர்.
அதேபோல், சேலத்தைச் சேர்ந்த ரெளடி ஜானை, ஈரோட்டில் வெட்டிக் கொலை செய்த 4 பேர் தப்ப முயன்றபோது, அவர்களின் காலில் சுட்டுக் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.