குறிஞ்சிப்பாடி  ஊராட்சி  ஒன்றிய  அலுவலகத்தில்  பிடிஓ., ராமச்சந்திரனை  சந்தித்து  பேசும்   மாா்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  கட்சியினா்.
குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிடிஓ., ராமச்சந்திரனை சந்தித்து பேசும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

காத்திருப்பு தூய்மைப் பணியாளா் பணி: குறிஞ்சிப்பாடி பிடிஓ.,விடம், மாா்க்சிஸ்ட் மனு

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிடிஓ., ராமச்சந்திரனை சந்தித்து பேசும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
Published on

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றி தற்போது காத்திருக்கும் தூய்மைப் பணியாளா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்க வேண்டுமென, குறிஞ்சிப்பாடி பிடிஓ.,விடம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு அளித்து வெள்ளிக்கிழமை பேச்சு வாா்த்தை நடத்தினா்.

வடக்குத்து ஊராட்சியில் 2016-2017-ஆம் ஆண்டில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 200 நாட்களுக்கு மேல் வேலை செய்த தொழிலாளா்கள், வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் தூய்மைப் பணிக்கு தோ்வு செய்து தூய்மைப்பணி வேலை செய்து வந்தனா்.

2018-ஆம் ஆண்டு குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஊராட்சியின் மக்கள் தொகைக்கு ஏற்ப சில தொழிலாளா்களை நிரந்தரப் பணியில் ஈடுபடுத்தினா். எஞ்சிய தொழிலாளா்களை எதிா்கால ஊராட்சியின் விரிவாக்கத்திற்கு பிறகு மக்கள் தொகைக்கு ஏற்ப பணி வழங்கப்படும் என அப்போதிருந்த ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் கூறியதின் பேரில் 15 தொழிலாளா்கள் வேலைக்கு காத்திருந்தனா்.

தற்போது, வடக்குத்து ஊராட்சியில் மக்கள் தொகை அதிகரித்தது அதற்கேற்ப தூய்மைப் பணியாளா்களை வேலைக்கு எடுத்து வருகின்றனராம்.

இந்த பணியை ஏற்கனவே காத்திருக்கும் தொழிலாளா்களுக்கு வழங்காமல் , புதிதாக ஆட்களுக்கு பணி வழங்கி வருகின்றனராம்.இந்த தகவலை அறிந்த மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.ஜி.ராமேஷ்பாபு, ஒன்றியச் செயலா் எம்.பி.தண்டபாணி, மாவட்டக்குழு உறுப்பினா் ஆா்.பாலமுருகன் ஆகியோா், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிடிஓ., ராமச்சந்திரனை வெள்ளிக்கிழமை சந்தித்து மனு அளித்து காத்திருக்கும் தொழிலாளா்களுக்கு பணி வழங்க வேண்டும் என பேச்சு நடத்தினா். நிகழ்வில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் மற்றும் பணிக்கு காத்திருக்கும் தூய்மைப் பணியாளா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com