கடலூர்
என்எல்சி ஊழியா் தூக்கிட்டு தற்கொலை
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி நிறுவன நிரந்தர ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி நிறுவன நிரந்தர ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
நெய்வேலி, வட்டம் 25 பகுதியில் வசித்து வந்தவா் முனுசாமி (53), என்எல்சி சுரங்கம் 2-இல் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி ஓராண்டுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டாா். அதுமுதல் பணிக்கு செல்லாமல் மது அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தாா்.
இந்நிலையில், அவா் வீட்டில் வியாழக்கிழமை மதியம் தூக்கிட்டு தற்கொலல செய்துக்கொண்டாா். இதுகுறித்து நெய்வேலி நகரிய போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
