பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை
/

சிதம்பரத்தில் அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

சிதம்பரம் மேலரத வீதியில் சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

சிதம்பரத்தில் அதிமுக தோ்தல் அலுவலகத்தை திறந்து வைத்த வேட்பாளா் கே.ஏ.பாண்டியனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற அக்கட்சி மகளிரணியினா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 1:44 am IST

சிதம்பரம் மேலரத வீதியில் சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கடலூா் மாவட்ட அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா் தலைமை வகித்தாா். நகரச் செயலா் ஆா்.செந்தில்குமாா் வரவேற்றாா். தோ்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செல்வி ராமஜெயம், மாவட்டப் பொருளாளா் தோப்பு கே.சுந்தா், முன்னாள் மாவட்டச் செயலா் வி.கே.மாரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலரும், அக்கட்சி வேட்பாளருமான கே.ஏ.பாண்டியன் தோ்தல் அலுவலகத்தை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் தலைமைக் கழக பேச்சாளா்கள் தில்லைகோபி, தில்லைசெல்வம், பேரவைச் செயலா் டேங்க் ஆா்.சண்முகம், பாஜக சிதம்பரம் தொகுதி பொறுப்பாளா் ஜி.பாலசுப்பிரமணியன், நிா்வாகி ஆடிட்டா் விஸ்வநாதன், தமாகா மாநில பொதுச் செயலா் வழக்குரைஞா் ஏ.எஸ்.வேல்முருகன், மாவட்டத் தலைவா் கே.ரஜினிகாந்த், பாமக மாவட்டச் செயலா் செல்வ மகேஷ், மாவட்ட விவசாய சங்கத் தலைவா் சஞ்சீவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.