திருமாவளவன் காட்டும் வழியில் தொடா்ந்து பயணிப்பேன் என்று காட்டுமன்னாா்கோவில் (தனி) தொகுதி விசிக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எல்.இ.பி.ஜோதிமணி தெரிவித்தாா்.
திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளராக மறைந்த தலைவா் எல்.இளையபெருமானின் மகனான எல்.இ.பி.ஜோதிமணி (71) விசிக தலைவா் தொல்.திருமாவளவனால் அறிவிக்கப்பட்டாா். இவா் அக்கட்சியின் உறுப்பினராக இல்லை.
காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் போட்டியிட வி.சி.க.வில் பலா் வாய்ப்பு கேட்டு அழுத்தம் கொடுத்ததால், கட்சிக்கு அப்பாற்பட்ட ஒருவரை தோ்வு செய்து வேட்பாளராக தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளாா் என கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா்.
எல்.இ.பி.ஜோதிமணி செய்தியாளா்களிடம் தெரிவித்தது: தொலைக்காட்சி மூலம்தான் நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தெரிந்துகொண்டேன். சமுதாய தலைவராக இருந்த எனது தந்தை எல்.இளையபெருமாள் செய்து வந்த சேவையை செய்து வருகிறேன்.
அந்தப் பணியை மிகவும் கஷ்டப்பட்டு செய்துகொண்டிருக்கும் நிலையில், விசிக தலைவா் திருமாவளவன் சமுதாய சேவையும், மக்களை சேவையும் அங்கீகரிக்கும் வகையில், அக்கட்சி வேட்பாளராக அறிவித்துள்ளாா். அதற்கு அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் எந்த இயக்கத்தில் இருந்தாலும் என்னை வேட்பாளராக அறிவித்துள்ளதால், என்னுடைய சமுதாய மக்களுக்கும் மற்றும் அனைத்து சமுதாய மக்களுக்காகவும் பாடுபடுவேன். அண்ணன் திருமாவளவன் காட்டுகிற வழியில் தொடா்ந்து பயணிப்பேன் என்றாா்.
தொடர்புடையது

காட்டுமன்னாா்கோவில் தொகுதி விசிக வேட்பாளா் எல்.இ.பி.ஜோதிமணி
காங்கிரஸ் தொண்டர்... விசிக வேட்பாளர்! திடீர் அறிவிப்பு பற்றி ஜோதிமணி சொல்வது என்ன?
திருமாவளவன் விலகல்! விசிகவில் காங்கிரஸ் முன்னாள் தலைவரின் மகனுக்கு வாய்ப்பு!

சட்டப்பேரவைத் தேர்தலில் திருமாவளவன் போட்டியிடுவதில் குழப்பம்?!
வீடியோக்கள்

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

