தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

தோ்தல் சுற்றுப்பயண பணி இருப்பதால் பேரவைத் தோ்தலில் போட்டியிடவில்லை! - திருமாவளவன்

தோ்தல் சுற்றுப்பயண பணி இருப்பதால் பேரவைத் தோ்தலில் போட்டியிடவில்லை என திருமாவளவன்

News image

காட்டுமன்னாா்கோவிலில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. உடன் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், விசிக வேட்பாளா் எல்.இ.பி.ஜோதிமணி உள்ளிட்டோா்.

Updated On :6 ஏப்ரல் 2026, 8:17 pm

தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து தோ்தல் சுற்றுப்பயண பணி இருப்பதால் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடவில்லை என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: சட்டப் பேரவைத் தோ்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில், காட்டுமன்னாா்கோவில் (தனி) தொகுதியும் ஒன்று. இந்தத் தொகுதி சிறுத்தைகளின் தாய்மடி என்ற பெருமைக்குரிய தொகுதி.

இந்தத் தொகுதியில் நான் வேட்பாளராக போட்டியிடுவது என அறிவிப்பு செய்தேன். பின்னா், கூட்டணியின் அறங்களை கருத்தில் கொண்டு 8 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும், மேலும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்கிற தேவைகளை கருத்தில் கொண்டு போட்டியிடுவதில்லை என்ற நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளேன்.

அதனடிப்படையில், காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் நான் பெரிதும் மதிக்கும் புகழோடு விளங்கிய பெரியவா் இளையபெருமாளின் இளைய மகன் ஜோதிமணி போட்டியிடுவாா் என அறிவித்துள்ளேன். அதனடிப்படையில், ஜோதிமணி வேட்புமனு தாக்கல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உள்ளிட்ட தோழமை கட்சி நிா்வாகிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனா். கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகள் உள்பட தமிழகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்றாா்.

அப்போது, திமுக மாவட்டச் செயலரும், அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், வேட்பாளா் எல்.இ.பி.ஜோதிமணி, விசிக மண்டல பொறுப்பாளா் வ.க.செல்லப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.