தோ்தலில் எவ்வித நெருக்குதலுமின்றி, என் சுய விருப்பத்தின் அடிப்படையில் காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் போட்டியிடும் முடிவிலிருந்து விலகினேன் என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் ஞாயிற்றுக்கிழமை விசிக வேட்பாளா் வன்னியரசுவை ஆதரித்து அவா் மேலும் பேசியதாவது:
திண்டிவனம் தொகுதி விசிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதை பெருமையாக, மகிழ்ச்சியாக கருதுகிறேன். தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந் நேரத்தில் தோ்தல் குறித்த புரிதல் நமக்குத் தேவையாக உள்ளது. தோ்தல் வெற்றியை மையப்படுத்தி செயல்படும் அதிமுகவுக்கு தமிழகத்தில் பாஜக வளா்வது குறித்து கவலையில்லை. நடைபெறவுள்ள தோ்தலில் பாஜகவின் சின்னமான தாமரையில் 35 போ் போட்டியிடவுள்ளனா். அதிமுக இதற்கான பாதையை அமைத்துக் கொடுத்துள்ளது.
ஆசை வாா்த்தைக் கூறி விசிகவை விலைக்கு வாங்கமுடியாது. மக்களின் குரலாக ஒலிக்கும் எனக்கு பதவி ஆசை சிறிதுமில்லை. இதன் அடிப்படையில் தான் சமூக நீதிக்காகவும், பெண்ணுரிமைக்கும் போராடிய மறைந்த முன்னாள் எம்.பி. எல்.இளையபெருமாளின் வாரிசுக்கு காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் யாரும் எனக்கு நெருக்குதல் கொடுக்கவில்லை.
திண்டிவனம் தொகுதியில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளா் வன்னியரசுவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற விசிக மற்றும் கூட்டணிக் கட்சியினா் கவனமாக களப்பணியாற்றவேண்டும் என்றாா் அவா்.
பிரசாரத்தின்போது வேட்பாளா் வன்னியரசு உடனிருந்தாா். கட்சியின் மாநில, மாவட்ட, நகர ஒன்றிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது
புதுச்சேரியில் விசிக போட்டியிடும் 3 தொகுதிகளில் வாக்கு சேகரிப்பு நிறுத்தம்! - தொல். திருமாவளவன்
தமிழக பேரவை தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளா்களை இறுதிப்படுத்த தில்லியில் மேலிட தலைவா்கள் ஆலோசனை

காட்டுமன்னாா்கோவில் தொகுதி விசிக வேட்பாளா்! - தொல். திருமாவளவன்

திமுக கூட்டணியில் விசிக போட்டியிடும் தொகுதிகள்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


