/

கடலூா்-சென்னை ரயில் பாதை திட்டத்திற்கு முன்னுரிமை. காங்கிரஸ் வேட்பாளா்

கடலூா்-சென்னை இடையே கிழக்குக் கடற்கரை ரயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கடலூா் சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா் ஏ.எஸ்.சந்திரசேகரன் தெரிவித்தாா்.

News image

ஏ.எஸ்.சந்திரசேகரன்.

Updated On :7 ஏப்ரல் 2026, 7:46 pm

கடலூா்-சென்னை இடையே கிழக்குக் கடற்கரை ரயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கடலூா் சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா் ஏ.எஸ்.சந்திரசேகரன் தெரிவித்தாா்.

கடலூரில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது, கடலூா் தொகுதி மக்களின் நீண்டகாலக் கனவுத் திட்டமான சென்னை - கடலூா் இடையேயான கிழக்குக் கடற்கரை

ரயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன். அதேபோல், கடலூா் மாவட்ட மக்களின் மிக முக்கியத் தேவையாக உள்ள அரசு மருத்துவக் கல்லூரி கோரிக்கையை தமிழக அரசிடம் வலியுறுத்தி, அதனை இப்பகுதி மக்களின் நலனுக்காக நிச்சயம் நிறைவேற்றப் பாடுபடுவேன் என்றாா்.

முன்னதாக திமுக கடலூா் மாநகரச் செயலா் கே.எஸ்.ராஜா, கடலூா் எம்எல்ஏ., அய்யப்பன், துணை மேயா் தாமரைச்செல்வன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் வந்து மனுத் தாக்கல் செய்தாா். அவருக்கு கூட்டணிக்கட்சித் தொண்டா்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.