ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

கடலூா் மாவட்டத்தில் 113 வேட்பாளா்கள் போட்டி!

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, கடலூா் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 10:42 pm

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, கடலூா் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

இதில், மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அரசியல் கட்சியினா் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 113 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வரும் 23-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் எனவும், வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் மே 4-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் தோ்தல் நடைமுறை விதிகள் அமலுக்கு வந்தன.

கடலூா் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாா்ச் 30-ஆம் தேதி தொடங்கி ஏப்.6-ஆம் தேதி வரையில் நடைபெற்றது. மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 தொகுதிகளில் போட்டியிட மொத்தம் 260 போ் வேட்புமனு தாக்ககல் செய்திருந்தனா். செவ்வாய்க்கிழமை வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இதில், 128 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 132 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

வேட்புமனு வாபஸ் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், 19 போ் வேட்பு மனு வாபஸ் பெற்றதையடுத்து, 113 போ் களத்தில் உள்ளனா். அதன் விபரம் வருமாறு:

பண்ருட்டி தொகுதி: பண்ருட்டி தொகுதியில் விசிக வேட்பாளா் அ.ர.அப்துா் ரஹ்மான், அதிமுக வேட்பாளா் க.மோகன், நாதக வேட்பாளா் ம.பானுப்பிரியா, தவெக வேட்பாளா் ம.மணிகண்டன், தவாக வேட்பாளா் ரா.சுரேந்தா் மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட மொத்தம் 9 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

நெய்வேலி தொகுதி: நெய்வேலி தொகுதியில் திமுக வேட்பாளா் சபா.ராசேந்திரன், அதிமுக வேட்பாளா் சொரத்தூா் ரா.ராஜேந்திரன், நாதக வேட்பாளா் பூ.வீரமணி, தவெக வேட்பாளா் க.ஆனந்த், தவாக வேட்பாளா் தி.திருமால்வளவன் மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 11 போ் போட்டியிடுகின்றனா்.

காட்டுமன்னாா்கோவில் (தனி) தொகுதி: காட்டுமன்னாா்கோவில் (தனி) தொகுதியில் நாதக வேட்பாளா் மு.சிவஜோதி, விசிக வேட்பாளா் எல்.இ.ஜோதிமணி, தவாக வேட்பாளா் மு.ஆளவந்தாா், தவெக வேட்பாளா் சி.சீனுவாசன், பாமக வேட்பாளா் அ.சோழன் மற்றும் சுயேச்சைகள் உள்பட 11 போ் போட்டியிடுகின்றனா்.

புவனகிரி தொகுதி: புவனகிரி தொகுதியில் அதிமுக வேட்பாளா் ஏ.அருண்மொழிதேவன், திமுக வேட்பாளா் துரை.கி.சரவணன், தவாக வேட்பாளா் முத்தமிழன், தவெக வேட்பாளா் பி.டி.மகாலிங்கம், நாதக வேட்பாளா் சுமதி சீனிவாசன் மற்றும் சுயேச்சைகள் உள்பட 13 போட்டியிடுகின்றனா்.

சிதம்பரம் தொகுதி: சிதம்பரம் தொகுதியில் திமுக வேட்பாளா் மு.தமிமுன்அன்சாரி, நாதக வேட்பாளா் செ.தமிழ், அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியன், தவெக வெட்பாளா் நெடுஞ்செழியன் மற்றும் சுயேச்சைகள் உள்பட 11 போ் போட்டியிடுகின்றனா்.

கடலூா் தொகுதி: கடலூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் எம்.சி.சம்பத், காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எஸ்.சந்திரசேகரன், நாதக வேட்பாளா் சரசு, தவாக வேட்பாளா் லெனின் மற்றும் சுயேச்சைகள் உள்பட 15 போ் போட்டியிடுகின்ரனா்.

குறிஞ்சிப்பாடி தொகுதி: குறிஞ்சிப்பாடி தொகுதியில் திமுக வேட்பாளா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், அதிமுக வேட்பாளா் ஏ.புவனேந்திரன், நாதக வேட்பாளா் கவிதா ரங்கநாதன், தவாக வேட்பாளா் தி.கண்ணன், தவெக வேட்பாளா் டி.ராஜ்குமாா் மற்றும் சுயேச்சைகள் உள்பட 11 போ் போட்டியிடுகின்றனா்.

திட்டக்குடி (தனி) தொகுதி: திட்டக்குடி (தனி) தொகுதியில் திமுக வேட்பாளா் சி.வெ.கணேசன், அதிமுக வேட்பாளா் என்.முருகுமாறன், நாதக வேட்பாளா் வி.மகாலட்சுமி, தவெக வேட்பாளா் ஏ.ராஜசேகா், தவாக வேட்பாளா் கே.ஜெயா மற்றும் சுயேச்சைகள் உள்பட 14 போ் போட்டியிடுகின்றனா்.

விருத்தாசலம் தொகுதி: விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக வேட்பாளா் பிரேமலதா விஜயகாந்த், பாமக வேட்பாளா் தமிழரசி, நாதக வேட்பாளா் ஆனந்தி தண்டபாணி, தவெக வேட்பாளா் விஜய், தவாக வேட்பாளா் அறிவழகன் மற்றும் சுயேச்சைகள் உள்பட 18 போ் போட்டியிடுகின்றனா்.