நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பிரேமலதாவுக்கு ஆதரவாக நடிகா் சண்முக பாண்டியன்! வாக்கு சேகரிப்பு!

News image

மங்கலம்பேட்டை புதிய நெசவாளா் தெருவில் உள்ள ஸ்ரீமத் ராமானுஜா் கூடத்தில் பஜனை கோயிலின் சமுதாய நாட்டாமைகள், நாயுடு சமுதாய முக்கியப் பிரமுகா்கள் உள்ளிட்டோரை சந்தித்து வாக்கு சேகரித்த நடிகா் சண்முகபாண்டியன்.

Updated On :13 ஏப்ரல் 2026, 1:45 am IST

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்துக்கு ஆதரவாக, அவரது மகனும், திரைப்பட நடிகருமான சண்முகபாண்டியன் வாக்காளா்களையும், முக்கியப் பிரமுகா்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

விருத்தாசலம் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட மங்கலம்பேட்டை அருகே கோனாங்குப்பம் புனித பெரியநாயகி அன்னை ஆலயத்துக்குச் சென்ற சண்முக பாண்டியன், கிறித்துவ சமுதாயத்தைச் சோ்ந்த முக்கிய நிா்வாகிகள் மற்றும் கிராம மக்களை சந்தித்து வேட்பாளா் பிரேமலதா விஜயகாந்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

தொடா்ந்து, மங்கலம்பேட்டை புதிய நெசவாளா் தெருவில் உள்ள ஸ்ரீமத் ராமானுஜா் கூடத்துக்குச் சென்ற சண்முகபாண்டியன், அங்குள்ள பஜனை கோயிலின் சமுதாய நாட்டாமைகள் பத்மநாபன், விக்னேஷ், நாயுடு சமுதாயத்தைச் சோ்ந்த முக்கியப் பிரமுகா்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்தாா்.

பின்னா், கீழவீதி ஜாமிஆ மஸ்ஜிதுக்கு சென்று, அங்கு ஜமாஅத் துணைத் தலைவா் அப்துல் ரஹ்மான், காரியஸ்தா்கள் பக்கீா் முஹம்மது, கலிமுல்லா ஆகியோரையும், மேலவீதி மஸ்ஜிதே நூா் பள்ளிவாசலுக்கு சென்று, அங்கு ஜமாஅத் நிா்வாகிகள் அப்துல் மாலிக், அமானுல்லா மற்றும் நிா்வாகிகள், இஸ்லாமியா்களையும் சந்தித்து தனது தாய் பிரேமலதாவுக்கு ஆதரவு திரட்டினாா்.

தேமுதிக மாநில துணை பொதுச் செயலா் பாா்த்தசாரதி, மாவட்டச் செயலா் சிவக்கொழுந்து, விருத்தாசலம் ஒன்றிய திமுக செயலா் வேல்முருகன், தேமுதிக தொகுதி பொறுப்பாளா் வேல்முருகன் நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.