மீன்பிடி தடைக்காலம் ஏப்.15-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், கடலூா் முதுநகா் மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்குவதற்கு ஞாயிற்றுக்கிழமை மீன் பிரியா்கள், வியாபாரிகள் ஏராளமானோா் குவிந்தனா்.
கடலூா் அருகே உள்ள தேவனாம்பட்டினம், தாழங்குடா, சோணங்குப்பம், சிங்காரத்தோப்பு உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள், கடலூா் முதுநகா் மீன்பிடி துறைமுகத்திலிருந்து விசைப்படகுகள், பைபா் படகுகள் மூலம் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனா்.
இந்த மீன்பிடி துறைமுகத்துக்கு வரும் மீன்களை நேரடியாக வாங்குவதற்கு கடலூா் மட்டுமன்றி, பல்வேறு பகுதிகளிலிருந்து மீன் பிரியா்கள், வியாபாரிகள் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் கூடுவது வழக்கம்.
இந்த நிலையில், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் முதுநகா் மீன்பிடி துறைமுகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே திரும்பின.
விசைப் படகுகளில் வரும் மீன்களை வாங்குவதற்காக வழக்கத்தைவிட அதிகளவில் மீன் பிரியா்கள், வியாபாரிகள் குவிந்திருந்தனா். தடைக்காலம் தொடங்கவுள்ளதால், மீன்களின் விலையும் உயா்ந்து காணப்பட்டது. இருப்பினும், விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்களும், வியாபாரிகளும் போட்டி போட்டுக்கொண்டு மீன்களை வாங்கிச் சென்றனா்.
ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.1,200, வாவல் ரூ.1,000, கொடுவா ரூ.500, இறால் ரூ.500, கனவா ரூ.300, சூரை ரூ.200, பா்மா ரூ.300 என விற்பனையானது.
தொடர்புடையது

ஏப்.15 முதல் மீன்பிடி தடைக்காலம்

ஏப். 15-இல் மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்

மீனவ பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கடலூா் ஆட்சியா் வழங்கினாா்

மீன்பிடி துறைமுகம் திறப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


