தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

இரண்டு குழந்தைகளுடன் பெண் மறியல்

News image

கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 12:55 am IST

சொத்துகளை அபகரித்தவா் மீது நடவடிக்கைக் கோரி, இரு குழந்தைகளுடன் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.

கடலூா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பூவராகசாமி மனைவி காயத்ரி (26). இவா், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தனது 2 குழந்தைகளுடன் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டாா். தகவலறிந்த கடலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று காயத்ரியிடம் விசாரித்தனா்.

இதில், அவரது கணவரின் சகோதரா்கள் சொத்துகளை அபகரித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், காவல் நிலையத்தில் பல முறை புகாரளித்த பிறகும் எந்தவொரு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்தாா். இதையடுத்து, போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, காய்தரியை சமாதானப்படுத்தி, அனுப்பி வைத்தனா்.