தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் தபால் வாக்களித்த அரசு ஊழியா்கள்

கடலூரில் நிலவிய சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள், தங்களது தபால் வாக்குகளை புதன்கிழமை பதிவு செய்தனா்.

News image

கடலூா் புதுப்பாளையம் புனித அன்னாள் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை தொடங்கிய தபால் வாக்குப் பதிவில், வாக்குகளை பதிவு செய்ய வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்த அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள்.

Updated On :16 ஏப்ரல் 2026, 3:50 am IST

கடலூரில் நிலவிய சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள், தங்களது தபால் வாக்குகளை புதன்கிழமை பதிவு செய்தனா்.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக கடலூா் மாவட்டத்தில் 2,590 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு தோ்தல் பணியில் ஈடுபடுவதால், அவா்களுக்கு தபால் வாக்களிக்க புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக, கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

கடலூா் மாவட்டத்தில் 1,240 போ் வாக்களிக்க விருப்பம் தெரிவித்திருந்தனா். அதன்படி, கடலூா் புதுப்பாளையத்தில் உள்ள புனித அன்னாள் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை காலை 11 மணியளவில் வாக்குப் பதிவு தொடங்கியது.

வெயில் தாக்கல் அதிகமாக இருந்த நிலையில், அதையும் பொருட்படுத்தாமல் ஏராளமான அரசு ஊழியா்களும், ஆசிரியா்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா்.

 தபால் வாக்கை செலுத்திய அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள்.

தபால் வாக்கை செலுத்திய அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள்.