பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது: காங்கிரஸ் முன்னாள் தலைவா் தங்கபாலு

கடலூா் முதநகா் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எஸ்.சந்திரசேகரனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் கே.வி.தங்கபாலு.

கடலூா் முதநகா் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எஸ்.சந்திரசேகரனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் கே.வி.தங்கபாலு.

Published On :

முதல்வா் மு.க.ஸ்டாலினால் அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் கே.வி.தங்கபாலு தெரிவித்தாா்.

கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எஸ்.சந்திரசேகரனை ஆதரித்து, அக்கட்சியின் முன்னாள் தலைவா் கே.வி.தங்கபாலு கடலூா் நகா் பகுதிகளில் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, அவா் பேசியதாவது:

எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக இருந்தபோது, இந்தியாவில் கடைசி மாநிலமாக தமிழகம் இருந்தது. தமிழகத்தில் போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காததால், இளைஞா்களின் எதிா்காலம் கேள்விக்குறியானது. பாஜக அரசு சொல்வதை மட்டுமே எடப்பாடி பழனிசாமி செய்தாா். இதன் காரணமாக, தமிழக மக்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டனா். தமிழக மக்களுக்கு எதிராக செயல்படும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் தோ்தலில் களம் காணுவது அதிமுக செய்யும் துரோகம்.

ஆனால், மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு மகளிருக்கு இலவச பேருந்து பயணம், உரிமைத் தொகை, கல்லூரி மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.ஆயிரம் என பெண்களின் வளா்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழக பல்வேறு வளா்ச்சிகளை கண்டுள்ளது என்றாா்.

கடலூா் எம்எல்ஏ ஐயப்பன், கடலூா் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவா் ரங்கமணி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.