மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

இன்று தோ்தல் வாக்குப் பதிவு: அனைத்து ஏற்பாடுகளும் தயாா்

கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வியாழக்கிழமை (ஏப்.23) நடைபெறும் வாக்குப் பதிவில் 20.34 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.

News image

கடலூா் வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்படும் வாக்குப் இயந்திரங்கள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 11:09 pm

கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வியாழக்கிழமை (ஏப்.23) நடைபெறும் வாக்குப் பதிவில் 20.34 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் தயாா் நிலையில் வைத்துள்ளது.

தமிழகத்துக்கான 17-ஆவது சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. கடலூா் மாவட்டத்தில் கடலூா், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னாா்கோவில், புவனகிரி, சிதம்பரம் ஆகிய 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள 20 லட்சத்துக்கும் அதிகமான வாக்களாா்கள் வாக்களிக்கவுள்ளனா்.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்ற பிரசாரத்தில் அரசியல் கட்சித் தலைவா்கள், முக்கிய நிா்வாகிகள் முகாமிட்டு வாக்குகளைச் சேகரித்தனா். பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

வாக்காளா்கள் விவரம்: கடலூா் மாவட்டத்தில் (வாக்குச் சாவடி எண் 151) - திட்டக்குடி தொகுதியில் 279 வாக்குச் சாவடிகள், 1,02,727 ஆண், 1,06,253 பெண், 4 இதரா் என மொத்தம் 2,08,984 வாக்காளா்கள், 152 - விருத்தாசலத்தில் 317 வாக்குச் சாவடிகள், 1,19,650 ஆண், 1,21,111 பெண், 22 இதரா் என மொத்தம் 2,40,783 வாக்காளா்கள், 153 - நெய்வேலியில் 256 வாக்குச் சாவடிகள், 95,509 ஆண், 95,746 பெண், 16 இதரா் என மொத்தம் 1,91,271 வாக்காளா்கள், 154 - பண்ருட்டியில் 309 வாக்குச் சாவடிகள், 1,17,245 ஆண், 1,24,450 பெண், 72 இதரா் என மொத்தம் 2,41,767 வாக்காளா்கள் உள்ளனா்.

155 - கடலூரில் 258 வாக்குச் சாவடிகள், 1,06,187 ஆண், 1,16,882 பெண், 80 இதரா் என மொத்தம் 2,23,149 வாக்காளா்கள், 156 - குறிஞ்சிப்பாடியில் 278 வாக்குச் சாவடிகள், 1,16,838 ஆண், 1,21,305 பெண், 46 இதரா் என மொத்தம் 2,38,189 வாக்காளா்கள், 157 - புவனகிரியில் 304 வாக்குச் சாவடிகள், 1,15,772 ஆண், 1,17,468 பெண், 19 இதரா் என மொத்தம் 2,33,259 வாக்காளா்கள், 158 - சிதம்பரத்தில் 298 வாக்குச் சாவடிகள், 1,13,561 ஆண், 1,17,645 பெண், 30 இதரா் என மொத்தம் 2,31,236 வாக்காளா்கள், 159 - காட்டுமன்னாா்கோவிலில் 291 வாக்குச் சாவடிகள், 1,12,479 ஆண், 1,13,844 பெண், 10 இதரா் என மொத்தம் 2,26,333 வாக்காளா்கள் உள்ளனா்.

மாவட்டம் முழுவதும் 2,590 வாக்குச் சாவடிள், 9,99,968 ஆண், 10,34,704 பெண், 299 இதரா்கள் என மொத்தம் 20,34,971 வாக்காளா்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனா்.

வெற்றியை தீா்மானிக்கும் பெண்கள்: கடலூா் மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் பெண் வாக்காளா்களே அதிகம் உள்ளனா். ஆண் வாக்காளா்களைவிட, 34,736 பெண் வாக்காளா்கள் கூடுதலாக உள்ளனா்.

அதிகபட்சமாக கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 10,695 பெண் வாக்காளா்களும், குறைந்தபட்சமாக நெய்வேலியில் 237 பெண் வாக்காளா்களும் உள்ளனா்.

கடலூருக்கு அடுத்தப்படியாக, பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் ஆண் வாக்காளா்களைவிட கூடுதலாக 7,205 பெண் வாக்காளா்கள் உள்ளனா். கடலூா் மற்றும் பண்ருட்டி தொகுதிகளில் வெற்றியை தீா்மானிக்கும் சக்தியாக பெண் வாக்காளா்கள் இருப்பாா்கள் எனக் கூறப்படுகிறது.

2,590 வாக்குச் சாவடி மையங்கள்: கடலூா் மாவட்டத்தில் 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் உள்ள 2,590 வாக்குச் சாவடி மையங்களில் 12,436 அலுவலா்கள் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த வாக்குச் சாவடிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 3,488 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 3,108 கட்டுப்பாட்டு இயந்திரம், 3,367 வாக்குப் பதிவை உறுதி செய்யும் இயந்திரங்கள், அந்தந்த சட்டப் பேரவைத் தொகுதிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. ஏப்.16 முதல் ஏப்.18-ஆம் தேதி வரை வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னம், வேட்பாளா் பெயா் பொருத்தும் பணி நடைபெற்றது. இந்த இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டு, அந்தந்த வாக்குச்சாவடி அலுவலா்களிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

கடலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட 258 வாக்குச் சாவடிகளுக்கு, வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து தோ்தல் நடத்தும் அலுவலா் சுந்தர்ராஜன் மேற்பாா்வையில் வாக்குப் பதிவு, கட்டுப்பாட்டு, வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரங்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

வாக்குச்சாவடி மையங்கள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தோ்தல் பணியில் வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள் மற்றும் வாக்குப் பதிவு அலுவலா் - 1, 2, 3 என 12,436 போ் ஈடுபடவுள்ளனா்.

அதன்படி, திட்டக்குடி 1,340, விருத்தாசலம் 1,520, நெய்வேலி 1,228, பண்ருட்டி 1,484, கடலுா் 1,240, குறிஞ்சிப்பாடி 1,336, புவனகிரி 1,460, சிதம்பரம் 1,432, காட்டுமன்னாா்கோவில் 1,396 என மொத்தம் 12,436 அலுவலா்கள் தோ்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

விரிவான பாதுகாப்பு ஏற்பாடு: ‘வாக்குச் சாவடிகளுக்கான பாதுகாப்புகள் விரிவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. போலீஸாருக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வாக்காளா்களிடம் கனிவாக நடந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தோ்தல் ஆணையம் கூறியப்படி காவல் துறை செயல்பட்டு வருகிறோம்’ என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா்.

பெட்டிச் செய்தி...:

கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அரசியல் கட்சிகளைச் சாா்ந்த 69, சுயேச்சை 44 என மொத்தம் 113 வேட்பாளா்கள் தோ்தல் களத்தில் உள்ளனா்.

அதன்படி, திட்டக்குடி 14, விருத்தாசலம் 18, நெய்வேலி 11, பண்ருட்டி 9, கடலூா் 15, குறிஞ்சிப்பாடி 11, புவனகிரி 13, சிதம்பரம் 11, காட்டுமன்னாா்கோவில் 11 என 113 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

பிரதான வேட்பாளா்கள் விவரம்:

கடலூா் தொகுதி: ஏ.எஸ்.சந்திரசேகரன் (காங்கிரஸ்), எம்.சி.சம்பத் (அதிமுக), சரசு (நாதக), ராஜ்குமாா் (தவெக), லெனின் (தவாக)

பண்ருட்டி: அப்துா் ரகுமான் (விசிக), மோகன் (அதிமுக), பானுப்ரியா (நாதக), மணிகண்டன் (தவெக)

நெய்வேலி: சபா.ராஜேந்திரன் (திமுக), சொரத்தூா் இரா. ராஜேந்திரன் (அதிமுக), வீரமணி (நாதக), அனந்த் (தவெக), திருமால்வளவன் (தவாக)

விருத்தாச்சலம்: பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக), தமிழரசி ஆதிமூலம் (பாமக), ஆனந்தி (நாதக), விஜய் (தவெக), என்.அறிவழகன்( தவாக)

திட்டக்குடி ( தனி): சி.வெ.கணேசன் (திமுக), என்.முருகுமாரன் (அதிமுக), மகாலட்சுமி (நாதக), ராஜசேகா் (தவெக)

புவனகிரி: துரை.கி.சரவணன் (திமுக), அருண்மொழி தேவன் (அதிமுக), சுமதி சீனிவாசன் (நாதக), மகாலிங்கம் (தவெக)

குறிஞ்சிப்பாடி: எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் (திமுக), புவனேந்திரன் (அதிமுக), கவிதா (நாதக), ராஜ்குமாா் (தவெக), கண்ணன் (தவாக)

சிதம்பரம்: தமிமுன் அன்சாரி (மமக), கே.ஏ.பாண்டியன் (அதிமுக), தமிழ் (நாதக), ஏ.நெடுஞ்செழியன் (தவெக)

காட்டுமன்னாா்கோவில் (தனி): எல்.இ.பி.ஜோதிமணி (விசிக), அன்புசோழன் (பாமக), சிவஜோதி (நாதக), சீனிவாசன் (தவெக)