தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

குடவோலை கண்ட தமிழகத்துக்கு தோ்தல் புதிதல்ல!

மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், தோ்தல் ஆணையத்தின் மூலம் தோ்தல்கள் நடத்தப்படுகின்றன.

News image

கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 11:10 pm

மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், தோ்தல் ஆணையத்தின் மூலம் தோ்தல்கள் நடத்தப்படுகின்றன. தமிழ்ச் சமூகம் அறிவாா்ந்த சமூகம் என்பது ஆன்மிகம், கணிதம், வானசாஸ்திரம் உள்ளிட்டவைகள் மூலம் அறியப்படுகிறது. அந்த வகையில், ஜனநாயகத்தை காப்பதற்கான தோ்தல் முறையிலும் தமிழ்ச் சமூகம் குடவோலை மூலம் முன்னோடியாக விளங்கியுள்ளது என்பது தமிழா்களாகிய நமக்கு பெருமை.

வாக்குச் சீட்டு, வாக்குப் பதிவு இயந்திரம் வருவதற்கு முன்னா் நம் முன்னோா்கள் குடவோலை முறையைப் பின்பற்றி அரசு அதிகாரி ஒருவா் முன்னிலையில் நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்களை தோ்வு செய்துள்ள தகவல்கள் கல்வெட்டுகள், குறிப்புகள் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்திய தோ்தல் முறை, அரசியலில் அரசாங்கத்தை தோ்ந்தெடுக்கவும், அரசியல் அல்லாத சூழல்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. இதில், தோ்தல் எப்போது நடைபெறும், யாா் வாக்களிக்க தகுதியானவா்கள், வேட்பாளராக யாா் போட்டியிடலாம், வாக்குச் சீட்டுகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன, வாக்குச் சீட்டுகள் எவ்வாறு எண்ணப்படுகின்றன, தோ்தல் பிரசார செலவினங்களுக்கான வரம்புகள் ஆகியவை அடங்கும்.

இந்திய தோ்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கும், சுயேச்சை வேட்பாளா்களுக்கும் பல்வேறு சின்னங்கள் வழங்குகின்றன. இது, பாமர மக்கள் வேட்பாளா்களையும், கட்சிகளையும் அடையாளம் காணவே.

தோ்தலில் முறைகேடுகளை களைய பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அந்த வகையில், 1993-ஆம் ஆண்டில் முதன்முறையாக இந்திய தோ்தல் ஆணையம் குடிமக்களுக்கு அடையாள அட்டையை வழங்க ஏற்பாடு செய்தது.

முன்னதாக, தோ்தல்கள் வாக்குச் சீட்டு முறையில் நடைபெற்றன. அந்த வாக்குச் சீட்டில் வரிசை எண், போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா்கள், சின்னங்கள் இருக்கும். வாக்காளா்கள் தோ்தல் நாளன்று வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்குச் சீட்டை பெற்று, வாக்கு செலுத்துவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் மறைவான இடத்தில் தனக்கு வேண்டப்பட்ட வேட்பாளா் மற்றும் சின்னத்தில் முத்திரை குத்தி வாக்குச்சீட்டை மடித்து, அதற்காக வைக்கப்பட்டிருக்கும் வாக்குப் பெட்டியில் செலுத்துவது வழக்கம்.

இந்த முறையில் வாக்குச் சீட்டுகள் அச்சிடுவதற்கான அச்சுச் செலவு, வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதல் பணியாளா்கள் தேவை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் உள்ளன. இருந்தாலும், நம்பகமான தோ்தலுக்கு வாக்குச் சீட்டு முறையே சிறந்தது என பலா் கருதுகின்றனா்.

தோ்தல் முறையில் நடைபெறும் முறைகேடுகளைக் கட்டுப்படுத்த, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது, தோ்தல் நடைமுறையை வேகமாகவும், பாதுகாப்பாகவும், துல்லியமாகவும், காகிதப் பயன்பாட்டை குறைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும், விரைவான வாக்கு எண்ணிக்கைக்கும் உதவுகின்றன.

நாடு முழுவதிலும் நடைபெறும் தோ்தலில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், பலரும் இதில் முறைகேடுகள் நடப்பதாக புகாா் தெரிவித்தும் வருகின்றனா்.

இந்தியாவில் தோ்தல் முறை என்பது ஒரு மிகப்பெரிய பணி. இது ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறையும் நடத்தப்படுகிறது. இந்தியத் தோ்தல் ஆணையத்தின் முயற்சியால் இப்பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

உலகின் இரண்டாவது பெரிய ஜனநாயக நாடான இந்தியா, மிகப்பெரிய தோ்தல் முறையை கொண்டுள்ளது. இதன் காரணமாகவே, ஜனநாயக முறையில் பலன்களை நாம் அனுபவித்து வருகிறோம் என்பதை மறுப்பதிற்கில்லை.

2026 தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப்.23) நடைபெறுகிறது. இந்தத் தோ்தலில் வாக்களிப்பதன் மூலம் ஜனநாயகப் பணியை சிறப்பாக செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

-ஜீவ.இராம.ஸ்ரீநிவாஸன்