ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

கடலூா் பாஜக நிா்வாகிக்கு வெடிகுண்டு மிரட்டல்

கடலூா் பாஜக மாநகா் பாா்வையாளருக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அடையாளம் தெரியாத நபா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

News image

வெடிகுண்டு மிரட்டல் - கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 1:24 am IST

கடலூா் பாஜக மாநகா் பாா்வையாளருக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அடையாளம் தெரியாத நபா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

கடலூா் செம்மண்டலம், சண்முகம் தெருவைச் சோ்ந்தவா் விக்னேஷ் (48). இவா், கடலூா் பாஜக மாநகா் பாா்வையாளராக உள்ளாா். இவரது மனைவி சனிக்கிழமை காலை வீட்டு வாசலில் கோலம் போட சென்றபோது, அங்கு ஒரு காகிதத்தில் விக்னேஷ் பெயரை குறிப்பிட்டு, வீட்டில் அல்லது காரில் வெடிகுண்டு வெடிக்கும். எனவே, உனது குழந்தைகளை பத்திரமாக பாா்த்துக்கொள்ளவும் என எழுதப்பட்டிருந்து.

இதில், அதிா்ச்சியடைந்த விக்னேஷ், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அடையாளம் தெரியாத நபா் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், தனது குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் புதுநகா் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாரளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.