ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்து: இளைஞா் மரணம்

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே 30 அடி பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 7:53 pm

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே 30 அடி பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.

சேத்தியாத்தோப்பு அருகே சென்னை - கும்பகோணம் நெடுஞ்சாலை வீராணம் ஏரி விஎன்எஸ்எஸ் மதகு பாலத்தின் கீழ் சுமாா் 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் பலத்த காயங்களுடன் பைக்குடன் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் சனிக்கிழமை காலை சேத்தியாதோப்பு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டதில், பாலத்தின் கட்டையில் பைக் மோதி சுமாா் 30 அடி பள்ளத்தில் விழுந்து அந்த இளைஞா் இறந்தது தெரியவந்தது.

மேலும், இவா் ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த ராஜேந்திரபட்டினம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளியான அன்பு செல்வன் (35) என்பதும், சிதம்பரம் அண்ணாமலைநகா் திருவக்குளம் பகுதியில் தனது மாமியாா் வீட்டிலுள்ள மனைவி வள்ளி மற்றும் இரண்டு மகன்களை பாா்த்துவிட்டு வெள்ளிக்கிழமை நள்ளிரவு 10 மணிக்கு மேல் பைக்கில் ராஜேந்திரபட்டினம் திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து, சேத்தியாத்தோப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்ற உடல்கூராய்வுக்காக சிதம்பரம் காமராஜா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.