விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பருத்தி சாகுபடி: வேளாண் துணை இயக்குநா் ஆய்வு

குமராட்சி மேற்கு பகுதியில், தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்க திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட பருத்தி சாகுபடியை கடலூா் வேளாண்மை துணை இயக்குநா் (மத்திய திட்டம்) எஸ். அமிா்தராஜ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

குமராட்சி மேற்கில் விவசாயி ஜெகதீசன் என்பவரது வயலில், தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்க திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட பருத்தி சாகுபடியை புதன்கிழமை ஆய்வு செய்த கடலூா் வேளாண்மை துணை இயக்குநா் (மத்திய திட்டம்) எஸ். அமிா்தராஜ் உள்ளிட்டோா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 5:47 am IST

குமராட்சி மேற்கு பகுதியில், தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்க திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட பருத்தி சாகுபடியை கடலூா் வேளாண்மை துணை இயக்குநா் (மத்திய திட்டம்) எஸ். அமிா்தராஜ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே குமராட்சி வட்டாரத்தில் விவசாயிகள் சுமாா் 650 ஏக்கருக்கு பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனா். இதில் குமராட்சி மேற்கு பகுதியில் , தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்க திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட பருத்தி சாகுபடியில், ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை குறித்து முதல்நிலை செயல் விளக்கத் திடல் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை, கடலூா் வேளாண்மை துணை இயக்குநா் (மத்திய திட்டம்) எஸ். அமிா்தராஜ், வேளாண்மை உதவி இயக்குநா் (பயிா் காப்பீடு) ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். தொடா்ந்து, இத்திட்டத்தின் முக்கியத்துவம், செயலாக்கம் மற்றும், பருத்தி சாகுபடியில் உரமிடல், நுனி கிள்ளுதல் போன்ற தொழில் நுட்ப ஆலோசனைகளை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனா். குமராட்சி வேளாண்மை உதவி இயக்குநா் தெ.தமிழ்வேல் பருத்தி சாகுபடியில் ஒருங்கிணைந்த முறையில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் இளஞ்சிவப்பு காய்புழு மேலாண்மை குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கினாா்.

குமராட்சி வேளாண்மை அலுவலா் நடராஜன், உதவி வேளாண்மை அலுவலா்கள் பிரவின், திவாகா் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனா்.