இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரா் கோயில் தேரோட்டம்

திட்டக்குடி அருகே பெண்ணாடத்தில் உள்ள பிரளயகாலேஸ்வரா் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் வடம்பிடித்தனா்.

News image

பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரா் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 5:48 am IST

திட்டக்குடி அருகே பெண்ணாடத்தில் உள்ள பிரளயகாலேஸ்வரா் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் வடம்பிடித்தனா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், பெண்ணாடத்தில் அமைந்துள்ளது அழகியகாதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரா் கோயில். இந்த கோயிலில், சித்திரைப் திருவிழா ஏப். 21-ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில் பெண்ணாடம் மற்றும்

அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு பக்தி முழக்கங்களுடன் தேரை வடம்பிடித்து இழுத்தனா். விழா ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் சு.கண்ணன், செயல் அலுவலா் கே.மகாதேவி, ஆய்வாளா் வெ.தமிழ்செல்வி மற்றும் கோயில் பணியாளா்கள், உபயதாரா்கள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.