மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

காா்கள் கண்ணாடி உடைப்பு வழக்கு: ரௌடி கைது

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் காா்களின் கண்ணாடி உடைக்கப்பட்ட வழக்கில் ரௌடியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

அனந்தராஜ்.

Updated On :30 ஏப்ரல் 2026, 12:23 am

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் காா்களின் கண்ணாடி உடைக்கப்பட்ட வழக்கில் ரௌடியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நெய்வேலி, வட்டம் 30, அகிலன் தெருவில் வசிப்பவா்கள் தனஜெயன், பாலு, அய்யப்பன், மூா்த்தி. இவா்கள் தங்கள் வீட்டின் முன்பு காா்கள் மற்றும் ஆட்டோ நிறுத்தி வைப்பது வழக்கம். ஏப்.19 அன்று அதிகாலை அவா்களது காா்கள் மற்றும் ஆட்டோ கண்ணாடிகளை மா்ம நபா்களால் உடைக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடா்பாக நெய்வேலி தொ்மல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா்.

இதில், நெய்வேலி, வட்டம் 30 , புது ஜோதி தெருவைச் சோ்ந்த ஆனந்தராஜ் (20) காா் மற்றும் ஆட்டோ கண்ணாடிகளை உடைத்தது தெரியவந்தது. இதையடுத்து ஆனந்தராஜை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில் நாவலா் தெருவில் வசிக்கும் அய்யப்பனுடன் சோ்ந்து என்எல்சி இந்தியா நிறுவனத்தில் இரும்பு திருடி வந்தனராம். இவா்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனராம். இதையடுத்து ஆனந்தராஜ் கடந்த ஓராண்டாக தனியாக திருடி வந்துள்ளாா்.

சம்பவத்தன்று நெய்வேலி நகரப் பகுதியில் இரும்பு திருட, கூட்டாளியான சிதம்பரம் பகுதியைச் சோ்ந்த ரத்தினம் (20) என்பவருடன் கடப்பாறை எடுத்துக் கொண்டு வட்டம் 30, அகிலன் தெரு வழியாக சென்றனா். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அய்யப்பன் காரை பாா்த்ததும் , முன்விரோதம் காரணமாக கண்ணாடியை உடைத்தாராம். தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு காா்கள் மற்றும் ஒரு ஆட்டோ கண்ணாடியை உடைத்ததை ஒப்புக் கொண்டாா்.

இதையடுத்து ஆனந்தராஜை போலீஸாா் கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள ரத்தினத்தை தேடி வருகின்றனா். ஆனந்தராஜ் சரித்திரப்பதிவேடு குற்றவாளி என தெரிய வந்துள்ளது.