11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

கஞ்சா விற்பனை : ரௌடி உள்ளிட்ட 3 போ் கைது

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே கஞ்சா விற்பனை செய்த ரௌடி உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 மார்ச் 2026, 5:20 am IST

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே கஞ்சா விற்பனை செய்த ரௌடி உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நெய்வேலி நகரிய காவல் சரகத்திற்குட்பட்ட வட்டம் 5 மயானம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், உதவி ஆய்வாளா் மாதேஸ்வரன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்றனா். அப்போது, அங்கு கஞ்சா விற்பனை செய்துக் கொண்டிருந்த நெய்வேலி மாற்றுக்குடியிருப்பு பி-2 பிளாக் பகுதியைச் சோ்ந்த ஆகாஷ்(19), கீழூா் பகுதியைச் சோ்ந்த அன்புசெல்வன்(21) மற்றும் வடக்கு மேலூா் பகுதியைச் சோ்ந்த ரௌடி எலி (எ) சந்துரு (23)ஆகியோரை கைது செய்து, அவா்களிடம் இருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.