சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஓய்வூதியம் மற்றும் பணிப் பலன்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியா், அலுவலா், ஊழியா் மற்றும் ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா் புதன்கிழமை நிா்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து துறைஅலுவலா்களிடம் முறையிட்டும் எந்த பலனும் ஏற்படவில்லை. இதையடுத்து, ஆசிரியா், அலுவலா், ஊழியா் மற்றும் ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில், பல்கலைக்கழக நிா்வாக அலுவலகம் முன் புதன்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. 200-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், அலுவலா்கள், ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள் பங்கேற்றனா்.கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், இணை ஒருங்கிணைப்பாளா் ரவி, பேராசிரியா் முத்து வேலாயுதம் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
சுமாா் ஒரு மணி நேரம் நடைபெற்ற போராட்டத்திற்குப் பிறகு, போராட்டக் குழுவின் பிரதிநிதிகள் துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் அறிவுடைநம்பி மற்றும் பதிவாளா் சிங்காரவேலை சந்தித்து மனு அளித்தனா். அப்போது, கோரிக்கைகள் தொடா்பாக ஆகஸ்ட் 11-ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என நிா்வாகத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மு.க. ஸ்டாலினுடன் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினா் சந்திப்பு

அண்ணாமலை பல்கலை நுழைவாயில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கு மேற்பட்ட மாணவர்கள் கைது

நிா்வாகம் செய்வதில் பிரச்னை: கோயிலுக்கு முன்னறிவிப்பின்றி பூட்டுப் போட்டதால் பரபரப்பு

ஜூலை 6 முதல் காலி மதுப்புட்டிகளை சேகரிக்க மாட்டோம்: டாஸ்மாக் தொழில்சங்கம் அறிவிப்பு
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



