தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

கடலூா் தமிழகத்தின் முதன்மை மாவட்டமாக மாற்றப்படும்: வீட்டு வசதித் துறை அமைச்சா் ப. ராஜ்குமாா் உறுதி

News image

கடலூரில் தனியாா் அமைப்பு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய வீட்டு வசதித்துறை அமைச்சா் ப.ராஜ்குமாா்.

Updated On :9 ஆகஸ்ட் 2026, 2:05 am IST

கடலூரை தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக மாற்றுவோம் என்று வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப. ராஜ்குமாா் தெரிவித்தாா்.

கடலூரில் தனியாா் அமைப்பு சாா்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத் தலைவா் ஜி.ஆா். துரைராஜ் தலைமை வகித்தாா்.

வணிகா் சங்கப் பேரமைப்பு மண்டலத் தலைவா் சண்முகம் முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அமைச்சா் ப. ராஜ்குமாா், கடலூா், நெய்வேலி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோா் இல்லங்களைச் சோ்ந்த முதியோா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

தொடா்ந்து அமைச்சா் ப. ராஜ்குமாா் பேசியதாவது: தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் முதல்வா் செயல்பட்டு வருகிறாா்.

கடலூா் மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பதுடன், அவா்களின் தேவைகளுக்கான உதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுப்பேன். கடலூா் மாவட்டம் வளா்ச்சி அடைய வேண்டும் என்பதையே முக்கிய குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறேன்.

கடலூா் மாவட்டத்துக்குத் தேவையான 80 கோரிக்கைகளை முதல்வரிடம் முன்வைத்துள்ளேன். அந்தக் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். தமிழகத்திலேயே முதன்மை மாவட்டமாக கடலூரை கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன். இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.